ஹீரோவா இருந்து என்ன பிரயோஜனம் !! வெளுத்து வாங்கிய வனிதா !! வைரலாகும் வீடியோ !!

சினிமா

சமீபத்தில் நடந்துமுடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகமான சர்ச்சைகளில் சிக்கியவர் வனிதா.வனிதா வீட்டினுள் இருக்கும்வரை பிக் பாஸ் வீடே ரணகளமாக இருந்தது.அதனால் விஜய் டீவியே இரண்டாவது முறை வனிதாவை மீண்டும் வீட்டிற்குள் அனுப்பினார்கள்.ஆனாலும் வெளியேற்றப்பட்டார் வனிதா.

மற்ற இரண்டு சீசன்களை காட்டிலும் இந்த சீசன் போட்டியாளர்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது என்றே சொல்லலாம்.நிகழ்ச்சி முடிந்தபின்னர் அவர்கள் செய்யும் செயல்கள் தினந்தோறும் செய்திகளில் இடம்பிடித்து விடுகின்றன.

இந்நிலையில், சர்ச்சைக்கு பெயர் போன நடிகை வனிதா விஜயக்குமார், தனது உடன்பிறந்த அண்ணன் அருண் விஜய்யின் பிறந்த தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், வனிதா விஜயக்குமாருக்கும், அவரது அப்பா, சகோதர, சகோதரிகளுக்குமிடையே பிரச்சனை இருப்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.

இந்நிலையில், வனிதா அருண் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் பதிவிட்டிருப்பது, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ட்விட்டில் அவர் தெரிவித்துள்ளதாவது,கருத்து வேறுபாடுகளை தீர்த்துக் கொள்ளலாம். ஒரு வாழ்க்கை ஒரு குடும்பம் ஒரே ரத்தம்.

நீங்களும், நானும் வெவ்வேறு விதமாக பயணிக்கலாம் ஆனால் ஒன்றாகத் தான் துவங்கினோம். நம் குடும்பத்தை பெருமையடையச் செய்ய வேண்டும். #HBDArunVijay உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ ஐ லவ் யூ என்று தெரிவித்துள்ளார்.

நான் என் தவறை சொல்லி மன்னிப்பு கேட்டும் அவர்கள் என்னை மதிக்கவில்லை. என் அப்பா விஜயகுமார் சரி என் சகோதரரான அருண் விஜய்யும் ஹீரோவாக இருந்து என்ன பிரயோஜனம் எத்தனையோ பேர் என்னை உங்கள் குடும்பத்தில் சேர்த்துக்கொள்ள கூறுகிறார்கள். இதனால் அவர்கள் உங்களை எப்படி கழுவி ஓட்டுகிறார்கள் என்பதும் நான் கண்டிருக்கிறேன்.