56 வயதில் மீண்டும் திருமணம் செய்து கொண்ட பிரகாஷ்ராஜ்… அன்பு முத்தங்களால் நிறைந்த இணையதளம்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…

சினிமா

தமிழ் சினிமாவில் கிடைத்த நல்ல நல்ல கதாபாத்திரங்களை பயன்படுத்தி தற்போது இந்தியா முழுவதும் சிறந்த குணச்சித்திர நடிகராக பெயரெடுத்து பிசியான நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ்.

மேலும் இந்திய சினிமாவிலேயே குணச்சித்திர நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பதும் பிரகாஷ்ராஜ் தான். ஒரு நாளைக்கு சில கோடிகள் வாங்குகிறார். பிரகாஷ்ராஜ் நடிப்பில் அடுத்ததாக கே ஜி எஃப் 2 படம் வெளிவர உள்ளது.

பிரகாஷ்ராஜ் சினிமாவுக்கு வந்த புதிதில் தடுமாறியபோது அவருக்கு உறுதுணையாக இருந்த லலிதா குமாரி என்பவரை 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கிட்டதட்ட 15 வருடங்கள் நல்ல முறையில் இல்லற வாழ்க்கையை நடத்தினார்.

ஆனால் அதன்பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதன்பிறகு 2010ஆம் ஆண்டு போனி வர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்க்கையை நடத்தி வருகிறார் பிரகாஷ் ராஜ்.

நேற்று தங்களுடைய 11 வது திருமண நாளை முன்னிட்டு நள்ளிரவில் தன்னுடைய இரண்டாவது மனைவியான போனி வர்மாவை மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.

காதல் ததும்பிய அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. பிரகாஷ்ராஜ் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ரஜினியின் அண்ணாத்த படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.