15 ரூபாய் கொடுத்து வாடகை வீட்டில் வாழ்ந்த பிரபல நடிகர் சூர்யாவின் தந்தை !! அந்த வீட்டை இப்போ யார் வெச்சிருக்காங்க தெரியுமா ??

சினிமா

55 வருடத்துக்கு முன்னர் வாழ்ந்த வாடகை வீட்டுக்கு சென்று பிரபல நடிகர் சிவகுமார் புகைப்படம் எடுத்துள்ளார்.இது குறித்த தகவல் இணையத்தில் உலாவி வருகின்றது.நடிகர் சிவகுமார் சென்னை ஓவியகல்லூரியில் படித்தவர்.

அந்த காலகட்டத்தில் 1958 ஆம் ஆண்டு சென்னை புதுப்பேட்டையில் உள்ள திருவேங்கடம் தெருவில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.இப்போது சென்னையில் பிரமாண்டமான சொந்த வீட்டில் வசிக்கும் சிவகுமாருக்கு திடீரென்று பழைய வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இந்த வீடு நடிகர்கள் சூர்யா, கார்த்திக்கு கூட தெரியாதாம்.

தனது மனைவியுடன் நேற்று அந்த வீட்டுக்குச் சென்ற நடிகர் சிவகுமார், தான் மட்டும் அந்த வீட்டு வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

அந்த வீடு இன்னும் பூட்டி கிடக்கிறது. அங்கு யாரும் இப்போது வசிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். 1958 ஆம் ஆண்டில் இருந்து 1965 வரை, மாதம் 15 ரூபாய் வாடகை கொடுத்து இந்த வீட்டில் வாழ்ந்துள்ளார்.