21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் தல அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி.. அதுவும் இந்த முன்னணி நடிகரின் திரைப்படத்திலா? ஹீரோ யார் தெரியுமா?

சினிமா

தளபதி விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி. இதன் பின் இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை ஷாலினி நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு இவர் எந்த ஒரு திரைப்படத்திலும் ஷாலினி நடிக்கவில்லை. இந்நிலையில் 21 வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறாராம் நடிகை ஷாலினி. ஆம் மணி ரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாய் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம் ஷாலினி.

இயக்குனர் மணிரத்னம் படம் என்பதால் தல அஜித்தும் இதற்கு ஓகே கூறியுள்ளார் என்றும் சில தகவல்கள் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அதிகாரப்பூர்வ தகவலுக்காக..