25 வயது மகனுக்கு ஆசைப்பட்ட டிவி நடிகை…! கடைசில மாட்டியது அவருடைய 55 வயது அப்பாதானாம்…!! அவரும் அந்த விஷயத்துல பெரிய ஆள்தானே…!!!

சினிமா

ஒரே காலகட்டங்களில் அப்பா மற்றும் மகன் இருவரும் நடித்து வருவது தமிழ் சினிமாவில் தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அப்பா மகன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து கொண்டுள்ளனர்.

இந்த வயதிலும் அவருடைய அப்பா பார்ப்பதற்கு மிகவும் இளமையாக இருக்கிறார். அவருடைய அப்பாவா அல்லது அண்ணனா என பார்ப்பவர்கள் குழப்பமடையும் அளவுக்கு இருவருமே துருதுருவென பேர்வழிகள்தான்.

தன்னுடைய மகனுக்கு நல்ல சினிமா எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் அந்த நடிகர் சமீபத்தில் ஒரு ரீமேக் படத்தில் தன்னுடைய மகனை களமிறங்கினர். ஆனால் அவருடைய நடிப்புக்கு கிடைத்த வரவேற்பு படத்திற்கு இல்லை எனவே சொல்லலாம்.

இதனால் மகனுடன் சேர்ந்து நடித்து அவருடைய மார்க்கெட்டை உயரத்தை விட வேண்டும் என ஆசை பட்ட அந்த நடிகர் கேங்ஸ்டர் படங்களை இயக்குவதில் கைதேர்ந்த பப்ளி இயக்குனர் ஒருவருடன் இணைந்து படம் பண்ணி வருகிறார்கள்.

இந்த படத்தில் நாயகியாக அந்த இளம் நடிகரின் அப்பாவுக்கு அந்தக்கால ஜோடியாக நடிக்க, சமீபத்தில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகை நடித்து வருகின்றார்.

இந்த படத்தில் இருந்து முதல் முதலில் அழைப்பு வந்தபோது அந்த டிவி நடிகை இளம் நடிகருக்குத்தான் ஜோடியாக அழைக்கிறார்கள் என ஆசை ஆசையாக வந்தாராம். ஆனால் வந்த பிறகுதான் தெரிந்ததாம் ஜோடி மகனுக்கு இல்லை அப்பாவுக்கு என்று. இருந்தாலும் அப்பா பெரிய நடிகர் தானே என மனதை ஆசுவாசப்படுத்தி நடித்து வருகிறாராம்.