28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் குஷ்பு !! ஹீரோ யாருன்னு தெரிஞ்சா அதிர்ச்சியாகிடுவீங்க !!

சினிமா

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களின் பேஃவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் கடந்த 2001ம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

திருமண வாழ்க்கைக்கு பிறகும் வெள்ளித்திரைகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டே தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.மேலும், அரசியலிலும் சில காலம் பயணித்தார் அம்மணி. ஆனால், அரசியலில் செல்ஃப் எடுக்காத காரணத்தினால் மீண்டும் சினிமாவிற்கே திரும்பியுள்ளார்.

தொலைகாட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், பல ஆண்டு காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த குஷ்பு இப்போது மீண்டும் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

ஆம், இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் நடிகை குஷ்பு ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்க்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், உறுதி செய்யப்பட்டதும் அதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறுகிறார்கள்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. நடிகைகுஷ்பு கடந்த 1992-ம் ஆண்டு வெளியான அண்ணாமலை படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு, 28 வருடங்கள் கழித்து ரஜினிக்கு ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியாக தான் இருக்கும்.