90ஸ் கிட்ஸ் மறக்க முடியாத தொகுப்பாளினி பெப்ஸி உமா என்னவானார் ?? தற்போதைய நிலையை பாருங்கள் !!

சினிமா

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட சில சமயங்களில் அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்துவருவார்கள்.குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நடிகர் சிவகார்த்திகேயன் அதற்கு ஒரு பெரிய உதாரணம்.சிறிய இடத்திலிருந்து ஆரம்பைத் அவர் தற்போது அடைந்திருக்கும் இடம் மிகப்பெரியது.யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு உயரத்தில் உள்ளார்.அந்தவகையில் பல்வேறு நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் உள்ளனர்.

முக்கியமாக 90களின் மக்களுக்கு மிகவும் பிடித்தமான பெப்சி உமா இதில் முதலிடத்தை பிடிப்பார்.இவர் தொகுத்து வழங்கிய பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை பார்க்காத ஆட்களே இருக்க முடியாது.90களில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு சில நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஐவரும் ஒருவர்.

சினிமா நடிகைகள் போல அழகாகவும் கண்ணைக்கவரும் வண்ணத்தில் புடவைகளும் உடுத்திவந்து இவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்க ஆரம்பித்தால் யாரும் டிவியில் இருந்து கண் எடுக்கமாட்டார்கள்.மக்கள் மத்தியில் அத்தனை பரிச்சியம் இவர்.இருந்தாலும் அவர் அதன்பின்பு பெரிதாக எந்த நிகழ்ச்சிகளிலும் தலை காட்டவில்லை.

மேலும் அந்த சமயத்தில் இருந்த பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க அழைப்புகள் வந்ததாகவும் அதனை அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது. அதனை பிரபலமான பெப்சி உமா தற்போது ஒரு பிரபல நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரிந்தவருகிறார்.