ZEE தமிழில் வரும் பிரபல நடிகைக்கு தி டீ ர் என்று நிச்சயதார்த்தம்.. இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து புகைப்படம் உள்ளே ..!!

சினிமா

சினிமா நடிகைகளை விட இப்போது அதிகமாக கவனிக்கபடுவது சீரியல் நடிகைகள் தான் இப்படி இருக்கும் போது இப்போது புதிதாக தொடங்கும் ஒவ்வொரு சீரியல் நடிகைகளுக்குமே மக்களிடையே அதிக ஆதரவும்,அன்பும் பெற ஆரம்பித்து விட்டனர். அப்படி சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் உள்ளது. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

முழுக்க முழுக்க காதல் பின்னணியில் உருவாக்க பட்டு வரும் இந்த சீரியல் தெலுங்கு சீரியலான ‘முத்த மந்தாரம்’ என்ற சீரியலை அடிபடையாக வைத்து சில மாற்றங்களை மட்டும் செய்து எடுத்து வருகின்றனர். இந்த தொடரில் ஆபீஸ் சீரியல் நடிகர் கார்த்தி நடித்து வந்த நிலையில் சமீபத்தில் அவர் இந்த சீரியலில் இருந்து விலகினார்.

இந்த சீரியலின் நாயகியாக ஷபானா நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடித்து வரும் போதே இப்போது பலருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ஷாபனாவிற்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யானுக்கும் திடீர் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருப்பதாய் தெரிவித்து இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ஆர்யானும் ஷபானாவும் காதலித்து வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.

சமீபத்தில் தான் இருவருமே கையில் மோதிரம் அணிதிருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு “அவளது உயிரின் மேல் காதல் வயப்பட்ட காரணம் இருவரது புற அழகு ஒரு நாள் காணாமல் போகும். ஆனால், உயிர் அப்படியே இருக்கும். அங்கு தான் காதல் வாழும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு ஷபானா ‘என்னை எப்பொழுதும் நீங்கள் ஆச்சரியப்பட வைக்க தவறியதில்லை’ என்று கமெண்ட் செய்திருக்கிறார். இந்த பதிவில் ரசிகர் ஒருவர் திருமணம் எப்போது என்று கேட்க அதற்கு சொல்கிறோம் என்று பதில் கூறியுள்ளார்